Categories

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு பரிசு பொருள் வழங்கிய பழைய சோறு.காம் நிறுவனர் அண்ணாதுரை

கோவை அக் 30,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பழைய சோறு டாட் காம் நிறுவனர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது.


இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாககோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சம்பத்குமார் மனைவி சரண்யா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கோட்டை சேது, தளபதி சபிக் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு, இனிப்பு, காரம் மற்றும் பாதுகாப்பு உபகரணம் ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தனர்.



இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களுக்கு சுகாதார ஆய்வாளர் சரவணன் பொன்னாடை அணிவித்து,நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வில் தவெக மகளிரணி நிர்வாகி ஜேஷ் ,விசிக நிர்வாகிகள் கோவை தமிழன், அன்சர், விஜயகுமார், ஐடிவிங் சுதாகரன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.