Categories

“எங்க வீட்ல ரைடே நடக்கல” – தவெக உறுப்பினர் மீனா ஜெயக்குமார் அதிரடி விளக்கம்

கோவை நவ 4

தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை (IT Raid) நடந்து வருவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், “நான் யாருக்கும் பினாமி இல்லை” எனத் முன்னாள் திமுக நிர்வாகியும்,தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் ‘ஆலம் விழுதுகள் அறக்கட்டளை’ நிறுவனருமான மீனா ஜெயக்குமார் காரசாரமாக வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவையை  சேர்ந்த மீனா ஜெயக்குமார், அப்பகுதியில் அழகு நிலையம்  ஒன்றை நடத்தி வருவதுடன் ‘ஆலம் விழுதுகள் அறக்கட்டளை’ என்ற அமைப்பின் மூலம் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் தி.மு.க கலை மகளிர் தொண்டரணி, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் ஆகிய அமைப்புகளில் மாநில துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்த இவர், கடந்த மே 2026-ல் தி.மு.க வில் இருந்து விலகி, ஜூலை 2026-ல் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்பான சோதனையின் போது இவரது வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் இவரது வீட்டில் ஐடி ரைடு நடப்பதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாய் பரவின.

“எங்க வீட்ல ரைடே நடக்கல” – மீனா ஜெயக்குமார் அதிரடி விளக்கம்

இது குறித்துச் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு உள்ள மீனா ஜெயக்குமார், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடுமையான வார்த்தைகளால் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவர் அந்த வீடியோவில் பேசியிருப்பதாவது:

“என்னது எங்க வீட்ல ரைடா ? என் வீட்ல ரைடே இல்லை. யாரு வீட்டுக்கு வந்ததுன்னு தெரியல, எல்லாரும் என்னைக் கூப்பிட்டுக் கேக்குறாங்க!
நான் என்ன சொல்றேன்னா… என் வீட்டுக்கு ரைடு வருதோ வரவில்லையோ, வந்தா வந்துட்டுப் போறாங்க. அவங்களுக்குத் தெரியும் நான் யாரோட சொத்துக்கும் பினாமியா இல்லைன்னு. எந்த ரைட்லயும் அது கன்ஃபார்மும் ஆகல.
அப்ப இல்லாத விஷயத்தை நீங்க ஏன் ? சோசியல் மீடியாவுல போட்டு எப்ப பார்த்தாலும் இவங்களுக்குப் பினாமி, அவங்களுக்குப் பினாமினு சொல்றீங்க? எதுக்கு நாங்க போய் பினாமியா இருக்கணும்? பினாமியா இருக்கறதுக்கு எங்களுக்கு எந்தத் தலையெழுத்தும் இல்லை. யாருக்கும் யாரும் பினாமி இல்லை. அவங்கவங்க கஷ்டப்பட்டுச் சம்பாதிச்சுச் சேர்த்து வச்ச சொத்து தான்.

உங்கள மாதிரி சோசியல் மீடியாவுல புரளியைக் கிளப்புறது தான் உங்க வேலையா ? அப்புறம் அதில் ஒருத்தர் சொல்றாரு… ‘ஒரு நகையைப் போட்டுட்டு அடுத்த தடவை அந்த நகையை போட மாட்டாங்க’ன்னு. ஏன் நீங்க ஏதும் வாங்கி கொடுத்தீங்களா ? அடுத்த தடவை போட மாட்டேன்னு சொல்றதுக்கு ? எல்லாரும் ஜுவல் வாங்கி கொடுத்தாத்தா சொல்றாங்க, யாருப்பா கூட நின்னு வாங்கி கொடுத்தீங்க ? எதுக்கு உங்களுக்கு இந்த பொழப்பு ? யாரைப் பத்தியும் திங்க் பண்றதுக்குக் கூட எனக்கு நேரமில்லை, எனக்கு நிறைய வேலை இருக்கு!”
இணையத்தில்

தனது வீட்டில் ரைடு எதுவும் நடைபெறவில்லை என்றும், நகை மற்றும் சொத்துக்கள் குறித்துப் அவதூறு பரப்புவோருக்கு மீனா ஜெயக்குமார் ஆவேசமாகப் பேசி உள்ள இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.