Categories

அதிமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட 325 தூய்மை பணியாளர்களுக்கு அலுவலகப்பணி வழக்கறிஞர் பன்னீர் செல்வம் கட்டம்

32 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளரக்ள் இரண்டாவது நாளாக போராட்டம்.

கோவை மாநகராட்சியில் 8000 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கால் பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கு போதிய அளவில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அரசால் நிர்ணயம் செய்யபட்ட குறைந்த பட்ச ஊதியம் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கபடுவது இல்லை.
மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கபடுவதில்லை என கூறி மாநகராட்சி தூய்மை பணியார்களின் கட்டமைப்பு சங்க தலைவர் வழக்கறிஞர் பன்னீர் செல்வம் தலைமையில் வேலை புறகணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
தற்போதைய அரசு
தேர்தல் அறிக்கையில் ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளித்த நிலையில் ஆறு மாதங்கள் கடந்தும் பணி நிரந்தரம் செய்யபடவில்லை என குற்றம் சாட்டினர்.

கடந்த அதிமுக 325 நிரந்தர தூய்மை பணியாளர்கள் பணி நியமனம் செய்யபட்டனர் ஆனால் இவர்கள் தூய்மை பணியில் ஈடுபடாமல் அலுவலக பணி மேற்கொள்வதாகவும் இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை எனவும் போராட்டதிற்கு மாநகராட்சி நிர்சாகம்,தொழிலாளர் நலத்துறை மர்றும் தொழிலாளர் நீதிமன்றத்தில் முறைப்படி அனுமதி எற்று இருப்பத்காக வழக்கறிஞர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.மேலும் 32 அம்ச கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்றவர் தீர்வு காணாத பட்சத்தில் தொடர் காத்திருப்பு போரட்டம் நடத்தபடும் என தெரிவித்தார்.