Categories

தேசிய நெடுஞ்சாலை துறை கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு தரவில்லை – விவசாயி தீக்குளிக்க முயற்சி!


தர்மபுரி டிச 10,
தர்மபுரி மாவட்டத்தில், இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்த முயன்ற தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளின் நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி ஊராட்சி புங்கன்குட்டை பகுதியை சேர்ந்த விவசாயி அழகுவேல் (49) என்பவருக்கு சொந்தமான
1 ஏக்கர் நிலம், அதியமான்–ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப் பட்டுள்ளது.



அந்த நிலத்தில் இருந்த கிணறு, மோட்டார் பம்பு செட், நான்கு போர்வெல்கள்,
140 தென்னை மரங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்று அழகுவேல் குற்றம் சாட்டியுள்ளார்.

அதே பகுதியில் உள்ள பிற விவசாயிகளுக்கு கிணற்றுக்கு மட்டும் 80 முதல் 90 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்ட நிலையில், அவருக்கு வெறும்
1 லட்சம் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

உரிய இழப்பீடு கிடைக்கும் வரை நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று கூறியிருந்த அழகுவேல் நிலப்பகுதிக்குச் இன்று தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் டி.எஸ்.பி. ராஜசுந்தர் தலைமையில் சென்றனர்.

அப்போது விவசாயி அழகுவேல் நியாயம் கேட்டு மிகுந்த மனவேதனையில் அழகுவேல், தன்னுடன் கொண்டிருந்த மண்ணெண்ணெயை உடல்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அதிரடியாக செயல்பட்ட போலீசார் தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, பொதுமக்கள் திரண்டதால் அதிகாரிகள் நிலம் கையகப்படுத்தும் முயற்சியை நிறுத்தி வந்து திரும்பினர்.

“உரிய இழப்பீடு வழங்காமல் எனது நிலத்தை எடுக்க முயன்றால், உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வழியில்லை” என்று அழகுவேல் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், நில எடுப்பு தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த முகுந்தன் சிலருக்கு கோடி கணக்கில் இழப்பீடு வழங்கி, மற்றவர்களுக்கு குறைவாக வழங்கியதாக கடுமையான குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.“இந்த முறைகேட்டை அரசு உடனடியாக விசாரித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என அந்தப்பகுதி விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.