Categories

198 மாணவர்கள்.198 நாடுகள்.ஐநா சபை செயல்பாடுகளை விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி



திருப்பத்தூர் ஜன.24-
திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலத்தில் அமைந்துள்ள சென் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில், அகில இந்திய 80-வது ஹியூமன் ரைட்ஸ் அமைப்பின் சார்பில், மாணவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை (UNO) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாபெரும் துவக்க விழா இன்று நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில், 198 மாணவ-மாணவிகள் உலகின் 198 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்கேற்று, ஐநா சபையின் செயல்பாடுகள், தீர்மானங்கள் மற்றும் உலக அமைதிக்கான அதன் பங்களிப்புகள் குறித்து அறிந்து கொண்டனர்.


மேலும் 17 நிலையான வளர்ச்சி நோக்கங்கள் குறித்து மாணவர்களின் உரை :- நிகழ்ச்சியில், ஐநா சபையின் 17 நிலையான வளர்ச்சி நோக்கங்கள் (Sustainable Development Goals) குறித்து, ஒவ்வொரு மாணவரும் தனித்தனி தலைப்புகளில் உரையாற்றினர்.
வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உலக அமைதி, மனித உரிமைகள் போன்ற முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றன.
எதிர்கால ஐநா பிரதிநிதிகளை உருவாக்கும் முயற்சி
இந்த விழாவில் கலந்துகொண்ட டாக்டர் செந்தூரப் பாண்டியன், ஹியூமன் ரைட்ஸ் அமைப்பின் சார்பில், மாணவர்களுக்கு உரையாற்றினார்.
அவர்,ஐநா சபை கூட்டங்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன
நாடுகளுக்கிடையேயான விவாதங்கள் மற்றும் தீர்மானங்கள் எப்படி அமைகின்றன எதிர்காலத்தில் ஐநா சபையில் பங்கேற்கும் போது மாணவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதைக் குறித்து விரிவாக விளக்கினார்.


மேலும், மாணவர்கள் நாளை ஐநா சபையில் பங்கேற்கும் தலைவர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கில், 198 மாணவர்களையும் 17 வகையான தலைப்புகளில் பேச வைத்து, அவர்களின் தன்னம்பிக்கை, பேச்சாற்றல் மற்றும் தலைமைத் திறனை வளர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டது.


பள்ளி நிர்வாகத்தின் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில்,தாளாளர் டாக்டர் Ln C.S ராஜா. முதல்வர் JC C.R  கௌதம். செயலர் C.R  வினோத் மற்றும்
ஆசிரியர்கள்
மாணவ-மாணவிகள்
என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மாணவர்களுக்கு உலகளாவிய பார்வை
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம், மாணவர்கள் ஐநா சபை, உலக அரசியல், மனித உரிமைகள் மற்றும் உலக அமைதி குறித்து ஆழமான புரிதலை பெற்றனர்.
எதிர்காலத்தில் உலக மேடையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களாக உருவாகும் பாதையில், இந்த நிகழ்ச்சி ஒரு முக்கியமான படியாக அமைந்தது.

செய்தி :நிருபர். கே.குமார்,

திருப்பத்தூர் மாவட்டம்.