Categories

பேரறிஞர் அண்ணா 57வது நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் முத்துசாமி மலரஞ்சலி செலுத்தினார்.

ஈரோடு பிப் 4,

அறிஞர் அண்ணாவின் 57வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு வீட்டு  வசதி நகர்புற வளர்ச்சி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி முகாம் அலுவலகத்தில் அறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மணல்மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திலும், பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், விவசாய அணி இணை செயலாளர் குறிஞ்சி சிவகுமார், மாநில மாணவரணி செயலாளர் வீரமணி ஜெயக்குமார், முன்னாள் எம்பி கந்தசாமி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட கழகத் துணைச் செயலாளர் செந்தில்குமார் பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் உள்ளிட்ட அனைத்து கழக நிர்வாகிகள், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,மகளிர் அணியினர் என அனைவரும் கலந்து கொண்டனர்.

மாவட்ட நிருபர்: யோகேஸ்வரி

உள்ளாட்சி அரசு நாளிதழ்