Categories

அடிபணிய நாங்கள் அதிமுக அல்ல கோவையில் சிபிஐ முத்தரசன் பரபரப்பு பேட்டி

எங்களை நிர்பந்திப்பதற்கு திமுக பாஜகவுமல்ல – அடிபணிவதற்கு நாங்கள் அதிமுகவைப் போல் அடிமையுமில்லை: சிபிஐ கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்

தேர்தலில் இவ்வளவு இடங்களில் தான் கொடுப்போம் என நிர்பந்திப்பதற்கு திமுக பாஜக அல்ல.ஏற்றுக்கொண்டு அடிபணிவதற்கு நாங்கள் அதிமுக போல் அடியுமையுமில்லை என சிபிஐ கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.

தேர்தல் சுற்றுப்பயணமாக திமுக கூட்டணியின் முக்கிய பிரமுகர்களை சந்திக்க பெரியநாயக்கன்பாளையத்திற்கு வருகை தந்த அவர் செய்தியாளரின் இந்த தேர்தலில் ஓரிடம் குறைத்து பெறப்பட்டுள்ளதால் சிபிஐ சமரசம் செய்து கொண்டதா என்ற கேள்விக்கு பதில் கூறியது.

திமுக நிர்பந்தித்ததா இல்லை சமரசம் செய்து கொண்டீர்களா என பல்வேறு செய்தியாளர்கள் கேட்கின்றனர். திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி. இக்கூட்டணியைபோல் வேறு எந்த கூட்டணியும் 10 ஆண்டுகளாக நிலைத்து நின்றதில்லை. கடந்த 1952 ஆண்டு முதல் தமிழக தேர்தல் வரலாற்றில் கூட்டணி அமைத்தே போட்டிகள் நடைபெற்றுள்ளன. நானறிந்த வரையில் திமுக கூட்டணியானாலும்,அதிமுக கூட்டணியானாலும் ஓராண்டுக்கு மேல் நீடித்ததாக வரலாறு இல்லை. ஆனால் தற்போதைய எங்கள் திமுக கூட்டணி 10 ஆண்டுகளாக நீடிப்பதற்கு காரணம் கொள்கைக்கூட்டணி. கொள்கைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அதனால் சீட்டு என்பது பிரச்னையில்லை. இது நமக்கு எது அபாயம் என்றே பார்க்கவேண்டும். எதுதீங்கானது.ஆர்.எஸ்.எஸ்.தான் தீங்கானது. இந்த தீங்கிற்கு தமிழகத்தில் சிலர் துணைபோய்விட்டனர். இவர்களை அனுமதிப்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த தேசத்திற்கே ஆபத்து. அந்த அக்கறையும், பொறுப்பும் எங்களுக்கு இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் இந்த கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளோம். அதனால் சீட்டு குறைவதைப் பற்றியே கூடுவதைப் பற்றியோ எங்களுக்கு கவலை இல்லை என்றார். அப்போது வால்பாறைத் தொகுதியின் முன்னாள் எம்,எல்.ஏ. ஆறுமுகம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிமன்றத் தலைவர் வெ.விஷ்வபிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.