Categories

முனைவர்  பி பழனியப்பன் வருகை; தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

முனைவர்  பி பழனியப்பன் வருகை; தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் முனைவர் பி பழனியப்பன் தனது சொந்த தொகுதிக்கு வருகை தந்தார்.

முன்னதாக அவர் சென்னையில் கட்சித் தலைவர்களையும், கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.



தலைவர்களுக்கு மரியாதை:

தொகுதிக்கு வருகை தந்த
முனைவர் பி.பழனியப்பன்  தனது தேர்தல் பணிகளைத் தொடங்கும் விதமாக, சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, தொகுதியில் உள்ள புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான லூர்துபுரம் கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டார்.

கூட்டணி கட்சியினர் திரண்டனர்:

வேட்பாளர் தொகுதிக்கு வந்த தகவலறிந்ததும், பொம்மிடி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, தென்கரைக்கோட்டை, பி.பள்ளிப்பட்டி, பையர்நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விசிக, தேமுதிக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமை கட்சியினர் திரண்டனர்.

பழைய தர்மபுரி மற்றும் ராஜபேட்டை, கடத்தூர் வழியாக வந்த வேட்பாளருக்கு, கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பி.பள்ளிப்பட்டி பகுதியில் கிறிஸ்தவப் பெருமக்கள் ‘ஆரத்தி’ எடுத்து வரவேற்றனர். அங்கு கிரேன் மூலமாக பிரம்மாண்டமான ரோஜா மாலை அணிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பையர்நத்தம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும் வேட்பாளருக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தேர்தல் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னதாக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள  தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது, கூட்டணி கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.