
கோவை மே 19 : இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும், எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஓபென் எலக்ட்ரிக் (Oben Electric) ஆனது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஓபென் ரோர் ஈவோ’ (Oben Rorr Evo) எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளுக்கு நுகர்வோரிடையே கிடைத்துள்ள பலத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் தனது ரீடெயில் விற்பனை நெட்வொர்க்கை வலுப்படுத்துவதற்கான திட்டங்களை இன்று அறிவித்துள்ளது. வரும் நிதியாண்டு 27-ன் (FY27) இறுதிக்குள் தமிழகம் முழுவதும் 25 ஷோரூம்களை திறந்து, வணிகத்தை விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ₹99,999 (எக்ஸ்-ஷோரூம்) என்ற அறிமுக விலையிலும், அதன்பின்னர் ₹1,24,999 (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையிலும் வழங்கப்படும் ரோர் ஈவோ (Rorr Evo), அதன் விலைப்பிரிவை விட கணிசமான அளவு உயர்வான அம்சங்களையும் செயல்திறன் தொகுப்பையும் (performance package) வழங்குகிறது. ஓபென் எலக்ட்ரிக் நிறுவனத்தின் தனியுரிம ஐபிஎம்எஸ்எம் (IPMSM) மோட்டார் மூலம் இயக்கப்படும் இது, 9 kW உச்ச ஆற்றலை (peak power) வெளிப்படுத்துகிறது;
இந்த விரிவாக்கம் குறித்து ஓபென் எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான மதுமிதா அகர்வால் கூறுகையில், “இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டில் மிகவும் நம்பிக்கைக்குரிய சந்தைகளில் ஒன்றாக தமிழ்நாடு தொடர்ந்து உருவெடுத்து வருகிறது, மேலும் இந்த மாற்றத்தில் கோவை முக்கிய பங்கு வகிக்கிறது. ரோர் ஈவோ (Rorr Evo) மாடலுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு, இந்திய நுகர்வோரிடையே அதிக செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களுக்கான தேவை அதிகரித்து வருவதை உறுதிப்படுத்துகிறது.,” என்றார்.
ஓபென் எலக்ட்ரிக் நிறுவனம் தற்போது தமிழகத்தில் கோவை, தேனி, சேலம், காரைக்குடி மற்றும் கடலூர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் ஷோரூம்களை இயக்கி வருகிறது. இந்த திட்டமிடப்பட்ட விரிவாக்கத்தின் மூலம், மாநிலத்தின் முக்கிய வளர்ச்சிச் சந்தைகளில் வாடிக்கையாளர்களுக்கான அணுகல், விற்பனைக்கு பிந்தைய ஆதரவு (after-sales support) மற்றும் ஈவி (EV) ஏற்புத்திறன் ஆகியவற்றை வலுப்படுத்துவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.














Leave a Reply