Categories

ரோட்டரி சங்கம் சார்பில் தனித்திறன் மாணவர்கள் மையத்திற்கு குடிநீர் இயந்திரம்

அறந்தாங்கி,செப்.25- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் அறந்தாங்கி நகரில் இயங்கி வரும் மாற்றுத்திறன் மாணவர்கள் மையத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.

அறந்தாங்கி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் தெய்வரெத்தினம் தலைமையில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீ தேவி அனைவரையும் வரவேற்றார்.

சங்கத்தின் பொருளாளர் மருத்துவர் செல்ல செந்தமிழ் செல்வன், ஆர்ஆர்ஏ டெக்னாலஜி நிர்வாக இயக்குனர் ரியாஸ் அகமது ஆகியோர் முன்னிலையில் முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் பா.வெங்கடேசன் தனித்திறன் மாணவர்கள் மையத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கினார்.

சங்கத்தின் செயலாளர் முனைவர் முபாரக் அலி மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகளை வழங்கி கலை நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

முன்னாள் பொருளாளர் அப்துல் காதர், நகராட்சி பள்ளி துணை தலைமை ஆசிரியர் நிர்மல் சகில்தா, மையத்தின் பொறுப்பு ஆசிரியர் ரேவதி ஆகியோர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்கள்.

இறுதியில் தனித்திறன் மாணவர்கள் மையத்தின் இயன்முறை மருத்துவர் சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.