
பென்னாகரம் நவ 10,
தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் சமரச மையத்தின் சார்பில் வழக்குகளுக்கு சமரச தீர்வு காண்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை பென்னாகரம் நீதிமன்றத்தில்
நீதிபதி கொடியேற்றி துவக்கி வைத்தார்.
நீதிமன்றங்களின் தொடரப்பட்ட வழக்குகளில் சமரச தீர்வு காணக்கூடிய தனிநபர் தகராறு, சொத்து பிரச்சனை, தொழிலாளர் நலன், பணம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு சமரச மையம் மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமரச மையத்தில் வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டால் முழு நீதிமன்ற கட்டணத்தையும் திரும்ப பெறலாம். அனைத்து நீதிமன்றங்களிலும் சமரச மையங்கள் செயல்படுகின்றன. சமரச மூலம் வழக்குகளை விரைவாக கையாண்டு சுமூகமான தீர்வுகளை கட்டணமில்லாமல் காண முடியும் . சமரச மையத்தில் காணப்படும் தீர்வு இறுதியானது. அதற்கு மேல் முறையீடு கிடையாது. வழக்குகளுக்கு சமரசம் தீர்வு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை பென்னாகரம் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி ரம்யா கொடி அசைத்து துவக்கி வைத்தார் .
இந்த வாகனம் பென்னாகரம் சுற்று வட்டார பகுதிகளான வட்டார வளர்ச்சி அலுவலகம், புதிய பஸ் நிலையம், போலீஸ் நிலையம், ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது . இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் , நீதிமன்ற ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்














Leave a Reply