Categories

அத்திக்கடவு அவினாசி நீரேற்று திட்டம் செயல்பட பங்காற்றிய நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு விவசாயிகளின் சார்பில் பாராட்டு விழா

அன்னூர் அக் 12,

கோவை மாவட்டம் அன்னூரில் அத்திக்கடவு அவினாசி நீர் ஏற்ற திட்டம் செயல்பட முழு முயற்சி செய்த நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு அத்திக்கடவு அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில் விவசாயிகளின் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திட்டம் செயல் வடிவம் பெற பெரும் பங்காற்றிய பொறியாளர்களான மேனாள் தலைமை பொறியாளர் சிவலிங்கம், மேனாள் முதன்மை தலைமை பொறியாளர் மன்மதன், தலைமை பொறியாளர் முருகேசன், மேனாள் கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன் மேலும் பணியாற்றிய உதவி பொறியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பின் அவர்கள் பேசியதில், இந்த திட்டத்தின் பணிகளை குறித்து ஏற்புரையில் எடுத்துக் கூறினார்கள். இதில் அன்னூர் அவனாசி திட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் கணேசன், நடராஜன், மனோஜ், வெள்ளியங்கிரி, தங்கமுத்து, சம்பத், பழனிச்சாமி ஆகியோர் வழி நடத்தலோடு விவசாயிகள் பலர் கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.