Categories

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு


கோவை மார் 19,
அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய கௌரவ தலைவர் மாண்புமிகு முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்களின் வழிகாட்டுதல் படி வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் மகளிர் தினம் கொண்டாட்டம் கோவை கீரணத்தம் பகுதியில் அமைந்துள்ள Stitchwell தனியார் நிறுவனத்தின் வளாகத்தில் இவ்வமைப்பின் நிறுவனத்தலைவர் முனைவர் ஆர்.கே.குமார் நடந்தது

.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இவ்வமைப்பின் மகளிரணி மாவட்ட தலைவர், தமிழ்நாடு மகளிர் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர்,ரோட்டரி அக்ருதி சங்கத்தின் பொருளாளருமான வழக்கறிஞர் தேன்மொழி கலந்து கொண்டு “என் வாக்கு” “என் உரிமை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.இதில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், நமது வாக்கை நாமே விற்பனை செய்யக்கூடாது ஆகவே பணத்தை வாங்கி கொண்டு வாக்களிக்க கூடாது என்றும் விளக்கமாக எடுத்துரைத்தார். மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு வாக்குரிமை என்பது எவ்வளவு முக்கியமானது என்றும் விலைமதிப்பற்ற வாக்குரிமையை முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து பேசிய Stitchwell நிறுவனத்தின் நிறுவனர், இவ்வமைப்பின் மாவட்ட தலைவர்  செந்தில் குமார் பேசுகையில் மகளிர் தினம் குறித்தும்,வாக்கு உரிமை குறித்தும் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தார். அது விழாவில் பங்கேற்றார்கள் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வில் தமிழ் பட்டிமன்ற பேச்சாளர், தமிழ்நாடு மகளிர் வழக்கறிஞர் சங்க செயலாளர்,ரோட்டரி சங்க பொருளாளர்,இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர் என்ற பண்முக சாதனையாளர் வழக்கறிஞர் தேன்மொழி அவர்களுக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு என  இவ்வமைப்பின் நிறுவனத்தலைவர் முனைவர் ஆர்.கே.குமார் தலைமையில் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்து சிறப்பு செய்யப்பட்டது.



இதனை தொடர்ந்து வாக்காளர் சிறப்பு விழிப்புணர்வு முகாமில், சிறப்பு அழைப்பாளர்கள் சமூக ஆய்வாளர் சரவணன், இவ்வமைப்பின் மகளிரணி மாவட்ட துணை தலைவர் எல்ஐசி சாந்தி,காட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம்,துணை தலைமை ஆசிரியர் செந்தில் குமார்,மாவட்ட துணை தலைவர் முனைவர் ராதாகிருஷ்ணன்,மாவட்ட துணை செயலாளர் விஜய்ராவ் ஆகியோர் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்கள். மேலும் இந்த நிகழ்வில் செயற்குழு உறுப்பினர்கள் சிகாமணி, கலைகண்ணன்,கந்தவேல்,மகேஷ்,
எல்ஐசி ராஜேஷ், ஸ்ரேயா, சூரியா மற்றும் Stitchwell நிறுவனத்தின் நிர்வாகிகள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.