Categories

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் அன்பு உள்ளங்கள் அறக்கட்டளை தொடக்கவிழா – நிறுவனத்தலைவர் பிரகாஷ் ரங்கசாமி தலைமையில் நடந்தது.

கோவை ஆக் 15,

இந்திய 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி 80வது வார்டில் அன்பு உள்ளங்கள் அறக்கட்டளை துவக்க விழா இதன் நிறுவனத்தலைவர் பிரகாஷ் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

இதுகுறித்து நிறுவனத்தலைவர் பிரகாஷ் ரங்கசாமி கூறியதாவது:-
அன்பு உள்ளங்கள் அறக்கட்டளையின் நோக்கமே இல்லாதவர்கள் என்பதை விட இயலாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வார வாரம் வியாழக்கிழமை தோறும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவளித்து வருகின்றோம். எங்களது நோக்கம்  உணவு வழங்குவது,இல்லாதவர் வர்களுக்கு அரச சலுகையில் பெற உதவுவது,கல்வி பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வி கொடை வழங்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஆர்கே அறக்கட்டளை கௌரி சங்கர்,சி.எஸ் அறக்கட்டளை கோவை ஸ்டிபன்ராஜ், அவர்னஸ்  நாகேந்திரன்,ரஞ்சிதம்,லதா,மகேஷ்வரி,பவித்திரா,செல்வராணி,நிர்மலாதேதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.