Categories

தருமபுரியில் பட்டியலின, பழங்குடியினர் பொருளாதார விடுதலை மாநாடு



*தருமபுரி, அக்.10-*

தருமபுரியில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாக கொண்ட தொழில்முனைவோர் பொருளாதார விடுதலை மாநாடு நடந்தது.

ஆதிதிராவிடர் வர்த்தக மற்றும் தொழில் தொலைநோக்கு பேரமைப்பு சார்பில், தருமபுரி டி.என்.சி. விஜய் மஹாலில் இந்த மாநாடு நடந்தது. இதில் பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர், வர்த்தகர்கள், தொழில் வல்லுநர்கள், தொடக்க நிலை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் புதிய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மாநாட்டில், தொழில்முனைவோருக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், அரசு திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் ஆதரவை பெறுதல், நிதி வசதிகள், தொழில்நுட்ப வளர்ச்சி, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குதல் மற்றும் புதுமையான தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள், வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துதல் மற்றும் கூட்டாண்மை மூலம் நிலையான தொழில் வளர்ச்சியை எட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், இளைஞர்களிடையே தொழில்முனைவு திறனை வளர்ப்பதற்கும் வழிவகுக்கும் வகையில் இந்த மாநாடு நடந்தது.